2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும்: வைகோ

Super User   / 2011 ஜனவரி 22 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்தும் தாக்குதல்களை இந்தியா தீவிரமாக கருத்திற்கொண்டு இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டுமென ம.தி.மு.க. தலைவர் வைகோ இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இன்று தெரிவித்துள்ளார்.

இத்தகைய தாக்குதல்களின்போது இந்திய கடற்படையும் கரையோர காவல் படையும் தமிழக மீனவர்களை பாதுகாக்க முயற்சிக்காமல், கைகைட்டி பார்த்துக்கொண்டிருப்பதாகவும் இந்திய பிரதமரிடம் வைகோ பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

'இவ்விடயத்தை பாரதூரமானதாகக் கருதி, எமது மீனவர்கள் மீதான தாக்குலுக்கு எதிராக இலங்கைக்கு எச்சரிக்கை விடுப்பது இந்திய அரசாங்கத்தின் கடமையில்லையா?' எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்திய பிரதமருக்கு அவர் கையளித்துள்ள மகஜர் ஒன்றில், எல்.ரி.ரி.ஈ இற்கு எதிராக போராடுவதாகக் காட்டிக்கொண்டு தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை இலங்கை இரசாங்கம் புரிந்ததாக குற்றம் சுமத்தியுள்ளார்.

"இந்திய அரசாங்கம் இப்படுகொலை தடுக்காமல் இலங்கை அரசாங்கத்திற்கு இராணுவ உதவிகளை வழங்கியது. அதற்கும் மேலாக பொதுநலவாய விளையாட்டுப் போட்டிக்கு வந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியா செங்கம்பள வரவேற்பு அளித்தது. இலங்கைக்கு இந்தியா வழங்கிய நியாயப்படுத்த முடியாத உதவிகளும் இந்திய கடற்படையின் செயற்பாடும் தமிழக மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்திள்ளது"  எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்தபோது இலங்கை இராணுவத்தால் தடுத்துவைக்கப்பட்டதாக கூறப்பட்ட தமிழக சட்டத்தரணி கயல்வழி பாதுகாப்பாக இந்தியாவுக்குத் திரும்பியமைக்காக இந்திய பிரதமருக்கு வைகோ நன்றி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--