Menaka Mookandi / 2011 ஜனவரி 25 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் நாட்டில் உள்ள நாகப்பட்டிணம் எனும் கிராமத்தில் உள்ள 500 மீனவர்கள் தமக்கு பாதுகாப்பு வழங்கும்படி கோரி இலங்கை அரசிடம் அடைக்கலம் கோரவுள்ளனர்.
'தமிழ் நாடு அரசும் இந்திய மத்திய அரசாங்கமும் உலக தரத்திலான கடற்படை, கரையோர பாதுகாப்பு படை என்பவற்றை வைத்திருந்த போதும் நாம் மீன்பிடிக்க செல்லும்போது எம்மை பாதுகாக்க தவறியமையால்தான் நாம் எமது உயிரை பாதுகாக்கும்படி அயல்நாடான இலங்கையிடம் தஞ்சம் கோர தீர்மானித்தோம்' என கிராம பஞ்சாயத்து தலைவரான எம்.கதிரவேலு எக்ஸ்பிஸுக்கு' தெரிவித்தார்.
ஒரு வாரத்தின்பின் 100 வரையிலான செயற்கை நார் படகுகளில் இந்த மீனவர்கள் அடைக்கலம் கோரி இலங்கையின் கடல் எல்லையை அடையவுள்ளனர்.
'இலங்கை கடற்படையினால், எமது நாட்டு மீனவரான என்.ஜெயக்குமார் கொல்லப்பட்டமையடுத்தே இந்த கசப்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. மாநில, மத்திய அரசுகள் இப்பிரதேச மீனவர்களின் துன்பத்தை விளங்கிக்கொள்ள அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே நாம் இதனை செய்கின்றோம்' என கதிரவேலு கூறினார்.
'இந்திய அரசாங்கம் ஆழந்த துயிலிலிருந்து விழித்து, தமிழ் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை நிறுத்துவதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென' இந்திய பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் எஸ்.ஏ.மகேஸ் கூறினார்.
16 minute ago
26 minute ago
37 minute ago
2 hours ago
xlntgson Tuesday, 25 January 2011 09:00 PM
புதினம் புதினத்துக்கு மேல் புதினம்! கியூபாவும் அமெரிக்காவும் தேவலை போலும்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
26 minute ago
37 minute ago
2 hours ago