2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

த.தே.கூட்டமைப்புடன் இணக்கம் ஏற்பட்டால் யாழில் வேட்புமனு தாக்கல் செய்யமாட்டோம்: சிவாஜிலிங்கம்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 26 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.சுகந்தினி)

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் நவ சம சமாஜக் கட்சியுடன் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் போட்டியிடுவதற்கு  யாழ். மாவட்டத்தில் 3 நகரசபைகள் உள்ளடங்கலாக 17 உள்ளூராட்சிமன்றங்களுக்கான வேட்புமனுக்களை நாளை வியாழக்கிழமை தாக்கல் செய்யவுள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணக்கம் காணப்பட்டால் யாழ். மாவட்டத்தின் 17 உள்ளூராட்சிமன்றங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதை நாம் கைவிடுவோமெனவும் அவர் கூறினார்.      

அவ்வாறு இணக்கம் காணப்படாதவிடத்து, யாழ். மாவட்டத்தில் 3 நகரசபைகள் உள்ளடங்கலாக 17 உள்ளூராட்சிமன்றங்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை வியாழக்கிழமை இடம்பெறுமெனவும் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

நவ சம சமாஜக் கட்சி சார்பில் திருகோணமலை, பட்டினமும் சூழலும் (உப்புவெளி) மூதூர் நகரசபைகளுக்கான  வேட்புமனுவை தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம், துணைச் செயலாளர் நாயகம் நித்தியானந்தம் ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தாக்கல் செய்தனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா ஒவ்வொரு வேட்புமனு இக்கட்சியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேறு சபைகளுக்கு இக்கட்சியினால் வேட்புமனு தாக்கல் செய்யப்படமாட்டாது.  

வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு  வேட்புமனு தாக்கல் செய்வதை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--