Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 பெப்ரவரி 15 , மு.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்நாட்டிலிருந்து டில்லியை நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் தமிழக மற்றும் ஒரிஸா மாநிலங்களிலுள்ள அகதிமுகாம்களைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் மஹாராஷ்டிரா மாநிலத்தை அடைந்துள்ளனர்.
டில்லியிலள்ள அரசாங்கத் தலைவர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களை சந்தித்து 1987 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட இந்திய -இலங்கை உடன்படிக்கை அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்துவதே இப்பயணத்தின் நோக்கமாகும்.
2005 கிலோமீற்றர் தூரம் கொண்ட இப்பயணம் கடந்த ஜனவர் 16 ஆம் திகதி தமிழ் நாட்டில் ஸ்ரீ பெரம்புத்தூரிலுள்ள ராஜீவ் காந்தி நினைவகத்திலிருந்து ஆரம்பமாகியது. முhர்ச் 18 ஆம் திகதி அவர்கள் டில்லியை சென்றடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் (ஈ.என்.டி.எல்.எவ்.) ஏற்பாட்டில் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.
ஈ.என்.டி.எல்.எவ். செயலாளர் நாயகம் எஸ். வாசிகன் இது தொடர்பாக இந்து பத்திரிகையிடம் பேசுகையில், இந்திய அமைதி காக்கும் படையினரை பின்தொடர்ந்து 3700 தமிழர்கள் வந்ததாக தெரிவித்தார்.
அவர்கள் தமது தாயகத்திற்கு திரும்பிச் செல்ல விரும்பினாலும் அங்கு நிலைமை உற்சாகமளிப்பதாக இல்லை என வாசிகன் தெரிவித்துள்ளார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago