2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

காலி – மாத்தறை ரயில் பாதை திறப்பு விழாவை ரயில்வே ஊழியர்கள் புறக்கணிப்பு

Super User   / 2011 பெப்ரவரி 15 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாளை நடைபெறவுள்ள, காலி- மாத்தறை ரயில் பாதையின் உத்தியோக10ர்வ திறப்பு விழாவில் ரயில்வே ஊழியர்கள் பங்குபற்றமாட்டார்கள் என ரயில்வே ஊழியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த ரயில் பாதையை உள்ளூர் ரயில்வே ஊழியர்கள் நிர்மாணிப்பதற்குப் பதிலாக இந்திய நிறுவனமொன்றுக்கு இதற்கான ஒப்பந்தத்தை வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே இந்நிகழ்வில் இலங்கை ரயில்வே ஊழியர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அகில இலங்கை  ரயில்வே ஊழியர்கள் பொதுச் சங்கத்தின்  பொதுச் செயலாளர் சுமதிபால மானவடு இது தொடர்பாக கூறுகையில், 'ரயில்வே திணைக்களத்தில் தகுதியீனங்கள் இருக்கலாம். அனால் அதற்கு ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொறியியலாளர்கள் மீது அதிகாரிகள் நம்பிக்கை வைக்காமையும் பகுதியளவு காரணம்.

2004 ஆம் ஆண்டு சுனாமியின் பின்னர் உடைந்த ரயில்வே பாதைகளை மீளபை;பதற்கு நாம் கூட்டாக செயற்பட்டோம்.  நாம் கடுமையாக பாடுபட்டோம். அப்பாதைகளை நிர்மாணிப்பதற்கு எம்மை அர்ப்பணித்திருந்தோம். ஆனால் இப்போது அவர்கள் இதை மறந்துவிட்டார்கள்' என்றார்.
தேவையான பொருட்களையும்  தொழில்நுட்ப வசதிகளையும் வழங்கினால் குறைந்தகாலத்திலும் குறைந்த விலையிலும் நாம் இந்த ரயில் பாதைகளை நிர்மாணித்திருப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.
 


  Comments - 0

  • chris Wednesday, 16 February 2011 10:38 PM

    ஏன் இந்தியாவின் ஆக்கிரமிப்புக்கு எமது அரசாங்கம் உள்ளாகியுள்ளது?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--