Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 பெப்ரவரி 15 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெறுவதற்கு ஆங்கில பாடத்தில் சித்தியடைவது கட்டாயம் என்ற தீர்மானம் இலவச கல்வியை பெறுவதற்கான மாணவர்களின் உரிமைக்கு பாரிய சவாலாகும் என இலங்கை ஆசிரியர்கள் சேவைகள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது.
' பல பாடசாலைகளில் ஆங்கிலத்தை கற்பிப்பதில் பெரும் எண்ணிக்கையிலான பிரச்சினைகள் உள்ளன. இந்நிலையில் இத்தீர்மானம் மிகவும் பாரபட்சமான, மாணவர்களுக்கு அநீதியிழைக்கும் தீர்மானம் என நாம் நம்புகிறோம்' என மேற்படி சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
'ஆங்கிலம் கற்பிப்பதற்கு வசதிகள் பற்றாக்குறையாக உள்ளதால் கிராமிய பாடசாலைகள் பல மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை நிராகரிக்க முடியாது. இத்தீர்மானம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமது உயர்கல்வியை தொடர்வதற்கான வாய்ப்பை இழப்பதற்கு வழிவகுக்கும்.
ஆங்கிம் கற்பது மிக முக்கியமானது. எனினும் ஆங்கிலத்தில் திறமையில்லாததால் மாத்திரம் மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை தடுப்பது நியாயமற்றது' எனவும் அவர் தெரிவித்தார்.
Naleem Wednesday, 16 February 2011 04:01 PM
இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் கூறுவது முற்றிலும் சரியானது. எமது நாட்டில் எத்தனையோ கிராமப்புற பாடசாலைகள் பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக திண்டாடிக் கொண்டிருக்கின்றன. சாதாரண வகுப்புக்களுக்கும் கூட இவ்வாரான பற்றாக்குறை நிலவும் போது உயர்தர மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பித்து பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவதென்பது சாத்தியமற்றது. எனவே இவ்விடயம் தொடர்பாக கல்வி அமைச்சு மீள சிந்திக்க வேண்டிய கடப்பாடு உள்ளது.
Reply : 0 0
Mohammed Mujeeb Jamaldeen Wednesday, 16 February 2011 05:47 PM
ஒரு வகையில் இது சரி. ஆயினும் அரசாங்கம் இக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
Reply : 0 0
xlntgson Wednesday, 16 February 2011 09:04 PM
கிராம பாடசாலைகள் கிராம பாடசாலைகள் என்று சொல்லிக்கொண்டு இருந்தால் எப்போது தான் ஆங்கிலத்தைக் கற்பிப்பது? எப்படித்தான் உலகை ஆள்வது? ஆங்கிலம் அவசியம் என்பதை அறிந்து கொண்டு அதை எந்த கட்டத்தில் இருந்து கட்டாயம் ஆக்க வேண்டும் என்று தெரியாவிட்டால் அதை விட மடத்தனம் ஒன்றும் இல்லை.
இந்த இலட்சணத்தில் நாம் மும்மொழித் திட்டத்தைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கின்றோம், வெட்கம்!
பாடசாலையில் 10 வருடம் படித்தும் ஆங்கிலம் வராவிட்டால் அது யாருடைய குற்றம்? ஆசிரியர் வைத்துக்கொண்டா சிங்களம் தமிழ் படிக்கின்றனர் கொழும்பில்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago