2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

கனிமொழி எம்.பி. உட்பட ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் கைது

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 16 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமராட்சி கிழக்குப் பகுதியில்  தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டமையைக் கண்டித்து சென்னையில் இன்று புதன்கிழமை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உட்பட  திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் 106 பேர் வடமராட்சி கிழக்குப் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இழுவைப் படகுகளுடன் கைதுசெய்யப்பட்டு யாழ். பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு கோரி சென்னை மைலாப்பூர் நாகேஸ்வரா பூங்காவிலிருந்து  கனிமொழி எம்.பி. தலைமையில் ஆயிரக்கணக்கான தி.மு.க. உறுப்பினர்கள்  ஊர்வலமாக இலங்கை தூதரகம் நோக்கி புறப்பட்டபோது, கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், ஜெ.அன்பழகன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ். பொலிஸாரால் தமிழக மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0

 • roshan hilmee Thursday, 17 February 2011 09:12 AM

  sirippa varudhungo

  Reply : 0       0

  mufee Thursday, 17 February 2011 09:17 AM

  தீவிரவாதிகளின் ஆதரவாளர்களின் மடமையை பாருங்கள். இந்தியாவில் குண்டு வெடித்தால் அது தீவிரவாதம். ஆனால் இலங்கையில் குண்டு வெடித்தால் அது விடுதலைப் போராட்டம் என்பார்கள்.

  Reply : 0       0

  mahsmali Wednesday, 16 February 2011 07:35 PM

  இது நன்றாக இருக்கிறது . இந்த நாடகம் எதிர்கால அரசியல் நாடகம் இதை பார்த்து சிரிப்பதா? அழுவாதா? தமிழர்கள் அழும்போது அரசியல் நாடகம் நடந்தேறியது இலங்கை தமிழன் சாவில் தான் இவர்களின் வாழ்க்கை வெற்றி! இது சீமான் எனும் புலிக்கு வைக்கும் வேட்டுதான் இது. சீமான் உன் திருப்பி அடிப்பான் எங்கே?

  Reply : 0       0

  xlntgson Wednesday, 16 February 2011 09:11 PM

  அரசியல் போராட்டங்களில் கைது ஆகின்றவர்கள் அன்று மாலையே விடுவிக்கப் பட்டுவிடுவர்! மாலைமுரசில் செய்தி வருவதற்கே போராட்டம், இது வைகோ சீமானுக்கும் பொருந்தும்!

  Reply : 0       0

  S. Sarath Kumar Wednesday, 16 February 2011 10:07 PM

  தேர்தலுக்கான நாடகத்தின் தொடர்ச்சியே இது...
  இது முடிவு அல்ல ஆரம்பமே...

  Reply : 0       0

  roshan Thursday, 17 February 2011 09:11 AM

  ah...ah.....ha....ha...

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--