2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

மீனவர்கள் விவகாரம்: இந்திய -இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் தொலைபேசியில் உரையாடல்

Super User   / 2011 பெப்ரவரி 17 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதற்;கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என நம்புவதாக அமைச்சர்  கிருஷ்ணா தெரிவித்தள்ளார்.

அமைச்சர் பீரிஸுடன் தொலைபேசி மூலம் பேசியபின்  செய்தியளார்களை சந்தித்தபோது அமைச்சர் கிருஷ்ணா இத்தகவலை தெரிவித்துள்ளார். இப்பிரச்சினையை சுமுகமாக தீர்ப்பதற்கு இரு நாடுகளின் அரசாங்கங்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்தாக கூறப்படும் 142 இந்திய மீனவர்கள் கடந்த சில நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்விடயம் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--