2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண பொலிஸ் ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை

Super User   / 2011 பெப்ரவரி 20 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்திற்கான மாகாண பொலிஸ் ஆணைக்குழு அமைப்பது தொடர்பிலான பிரேரணையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தன.

இது தொடர்பிலான பிரேரணையொன்று கிழக்கு மாகாண சபையில் விரைவில் நிறைவேற்றப்பட்டு மாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆணைக்குழுவிற்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைவராக செயற்படுவார்.

ஜனாதிபதி மற்றும் மாகாண முதலமைச்சர் ஆகியோரால் தலா ஒருவர் இந்த ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர்.

இந்த மாகாண பொலிஸ் ஆணைக்குழு, மாகாணத்திலுள்ள பொலிஸாரின் இடமாற்றங்கள் பதவியுயர்வுகள், ஒழுக்காற்று கட்டுப்பாடுகள் போன்றவற்றிற்கு பொறுப்பாக செயற்படும்.

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அவை இதுவரை வழங்கப்படவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--