Menaka Mookandi / 2011 பெப்ரவரி 22 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இன்று அதிகாலை கொழும்பு, பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் உடனடியாக சென்னைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் இன்று நடடைபெறவுள்ளது. பொதுமக்களின் அஞ்சலிக்காக தீருவில் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக திருமாவளவன் உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை 2 மணியளவில் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இருப்பினும் அவர்களை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்திய பாதுகாப்பு தரப்பினர் மீண்டும் அவர்களை சென்னைக்கு உடனடியாகத் திருப்பி அனுப்பியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தமிழ்மிரர் இணையத்தளத்துக்கு சற்றுமுன்னர் தெரிவித்தார்.
இதேவேளை, சென்னைக்கு திரும்பிச் சென்ற திருமாவளவன், 'தான் திருப்பி அனுப்பப்பட்டதானது இந்தியாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவேன்' என்றும் சென்னை விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
25 minute ago
33 minute ago
1 hours ago
2 hours ago
Srilankan Tuesday, 22 February 2011 10:26 PM
திருமாவளவனை திருப்பியனுபியது 100% சரி இவன் இலங்கைக்கு எதிரானவர். ஆகவே இலங்கை செய்தது சரியானதே !!!
Reply : 0 0
xlntgson Wednesday, 23 February 2011 08:50 PM
மரண வீட்டை அரசியல் வீடாக்குவது தமிழ்நாட்டில் சர்வ சகஜம்! திருமண வீட்டில் அரசியலாவது பரவாயில்லை, அதைக்கூட நான் வெறுக்கின்றேன்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
33 minute ago
1 hours ago
2 hours ago