2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

மயோன் முஸ்தபாவுக்கு எதிரான வழக்கு மே மாதம் வரை ஒத்திவைப்பு

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 22 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(பாரூக் தாஜுதீன்)

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மயோன் முஸ்தபா நோய் ஒன்றுக்காக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதை கருத்தில் கொண்டு அவருக்கு எதிரான இலஞ்ச வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மொகமட் முசாமிலுக்கு இலஞ்சம் கொடுத்து, ஜனாதிபதி தேர்தலின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவுக்கு ஆதரிக்க வைக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மயோன் முஸ்தபாவுக்கு எதிராக புலனாய்வு பொலிஸார் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பிரதிவாதியின் சார்பில் ஆஜரான திலக் மாரப்பன, சந்தேகநபர் நோய் ஒன்றுக்காக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருகின்றார் என கூறி வழக்கை ஒத்திவைக்கும்படி நீதிமன்றைக் கேட்டுக்கொண்டதை அடுத்து இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


  Comments - 0

  • xlntgson Sunday, 27 February 2011 09:31 PM

    நோய் ஒன்று தானா? அது சரி மயோனா "மை ஓனா"? my own

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .