Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 பெப்ரவரி 22 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(டியன் சில்வா)
வசிப்பதற்கு மோசமான நகரங்களின் வரிசையில் கொழும்பு சேர்க்ப்பட்டமைக்கு கொழும்பிலுள்ள அதிகாரிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார மதிநுட்ப அலகு எனும் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள வசிப்பதற்கு உகந்த நகரங்களின் பட்டியலில் 140 நகரங்களில் கொழும்பு 131 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
'அவர்கள் எவ்வாறு இந்த மதிப்பீட்டை மேற்கொண்டார்கள் எனக்கு ஆச்சரியமாகவுள்ளது. 10 வருடங்களுக்கு முந்தைய பழைய தகவல்களைக் கொண்டு இந்த மதிப்பீட்டை மேற்கொண்டிருப்பார்கள் போலும். வீதி ஒழுங்குகள், தூய்மை என்பனவற்றில் தெற்காசியாவின் ஏனைய நகரங்களைவிட கொழும்பு வெகுவாக முன்னிலையில் உள்ளது' என கொழும்பு மாநகரசபை ஆணையாளர் ஒமர் காமில் கூறினார்.
அதேவேளை, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இந்த ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்ட தகவல்களின் உண்மைத் தன்மை குறித்து கேள்வி எழுப்பினார். 'இந்நகரில் உள்ள மக்கள் எந்தளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை காணமுடியும். எம்மை கடைசி 10 இடங்களில் தரப்படுத்துவர்களாயின் அவர்கள் இதற்கு எந்த சுட்டிகளை பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை' என அவர் கூறினார்.
அதேவேளை, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்கள் கொழும்பு நிலைமை தொடர்பாக சாதகமான அறிக்கைகளை வெளியிட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சரும் அரசாங்க பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல கூறினார்.
mam.fowz Wednesday, 23 February 2011 03:02 PM
உண்மை சொன்னால் கோபம் வரும் !!!
Reply : 0 0
xlntgson Thursday, 24 February 2011 10:45 PM
வங்கதேசத்து டாக்காவை விட மேலான இடத்தில் தான் இருக்கிறதாம், இப்போதும் கோபமா? சிரியுங்களேன் நன்றாக இருக்கும்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
55 minute ago
1 hours ago