Super User / 2011 பெப்ரவரி 23 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கெலும் பண்டார)
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட மாகாண விவசாயிகளுக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 500 உழவு இயந்திரங்களில் 200 உழவு இயந்திரங்கள் இரண்டு அரச நிறுவனங்களுக்கு கைமாற்றப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தது.
இதில் 100 உழவு இயந்திரங்கள் தெங்கு அபிவிருத்தி சபைக்கும் மற்றைய 100 உழவு இயந்திரங்கள் மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்கும் கைமாற்றப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இன்னும் 100 உழவு இயந்திரங்கள் விசாயிகளுக்கு வழங்காமல் தென் பகுதிக்கு அனுப்ப தயாராகவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்திலுள்ள விவசாய நிறுவனங்களுக்கு 38 உழவு இயந்திரங்களை மாத்திரம் கையளித்துள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சில நிறுவனங்களுக்கும் மேலும் 38 உழவு இயந்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக சுமந்திரன் கூறினார்.
மிகுதியாகவுள்ள 124 உழவு இயந்திரங்கள் தொடர்பில் அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
யுத்தத்தினால் சுமார் 10,000 உழவு இயந்திரங்கள் அழிக்கப்பட்டமையால் சாதாரண விவசாயிகள் நன்மையடையும் விதமாக அயல் நாடு நட்பு ரீதியில் வழங்கிய நன்கொடைக்கு அரசாங்கம் ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்? என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026