2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

போக்குவரத்து பொலிஸார் கையடக்க தொலைபேசி பாவிக்க தடை

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 24 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வேலை நேரங்களில் கையடக்கத் தொலைபேசி பாவிக்கும் போக்குவரத்து பிரிவு பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்து பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

தலைமை அதிகாரி மாத்திரமே கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தலாம். ஏனையோர் தமக்கு உத்தியோக ரீதியாக வழங்கப்பட்ட தொடர்பாடல் சாதனங்களையே பயன்படுத்த வேண்டுமெனவும் அந்த அதிகாரி  குறிப்பிட்டார்.

மோட்டார் சைக்கிளை செலுத்தியவாறு கையடக்க தொலைபேசியை பாவிப்பதற்கும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும்  அவர் கூறினார்.

பொதுமகன் ஒருவர் வாகனம் செலுத்தும்போதோ அல்லது மோட்டார் சைக்கிள் செலுத்தும்போதோ கையடக்கத் தொலைபேசியை பாவித்தால் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்களென்பதுடன், அது குற்றமாக நிரூபிக்கப்பட்டால் குறைந்த பட்சம் 1,500 ரூபாய் தண்டம் விதிக்கப்படுமெனவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. (B.M. Murshideen)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--