2025 ஜூலை 09, புதன்கிழமை

முஸ்லிம் காங்கிரஸ் மீதான ஐ.தே.க.வின் ஒழுக்காற்று நடவடிக்கை தடை நீடிப்பு

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 24 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(லக்மால் சூரியகொட)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அக்கட்சியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கக் கூடாதென விதித்த தடை உத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மேலும் நீடித்துள்ளது.

ஐ.தே.க.வுடன் இணைந்து தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஐ.தே.க. தீர்மானித்திருந்த நிலையில் அதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்த போது அந்த தடை உத்தரவை தொடர்ந்தும் நீடிக்க உத்தரவிட்ட நீதவான் வழக்கு விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி வரையில் ஒத்திவைத்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சார்பில் விஜயதாச ராஜபக்ஸ நீதிமன்றில் ஆஜராகினார். சிரேஷ்ட வழக்குரைஞர் ஜீ.ஜீ.அருள்பிரகாசம் மனுதாரருக்காக ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .