Super User / 2011 பெப்ரவரி 27 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
லிபியாவிலிருந்த நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் ஜோர்டானுக்கூடாக இலங்கையை வந்தடைந்துள்ளனர். மேலும் 36 பேர் நாளை இலங்கை வந்தடைவர் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.
லிபியாவில் சுமார் 800 இலங்கையர்கள் இருந்ததாகவும் அவர்களை இந்தியா போன்ற ஏனைய நாடுகளின் உதவியுடன் விமானங்கள், வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானங்கள், படகுகள் என்பனவற்றை பயன்படுத்தி வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அங்கு அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பாக இருப்பதகாவும் அவர்களை பாதுகாப்பாகவும் விரைவாகவும் வெளியேற்றுவதை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கிங்ஸ்லி ரணவக்க மேலும் தெரிவித்தார்.
11 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
43 minute ago
1 hours ago