2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

புதிய வீதி ஒழுங்கு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 02 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை விமானப்படையின் 60ஆவது கொண்டாட்டம் மற்றும் கண்காட்சியையொட்டி இன்று முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து ஒழுங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்றையதினம் பேக்கரி சந்தி  முதல் மலிபன் சந்தி வரையான வீதி காலை 7 மணி முதல் முற்பகல் 10 மணி வரையும் பின்னர் பிற்பகல் 2 மணி முதல் அதிகாலை 1 மணி வரையும் மூடப்படும். மேலும் மார்ச் 3ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும்  மேற்படி வீதி மூடப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.  

காணிவெல் மற்றும் கண்காட்சிக்காக செல்லும் வாகனங்கள் மாத்திரம் பேக்கரி சந்தி  முதல் மலிபன் சந்தி வீதியில் பயணிப்பதற்கு அனுமதிக்கப்படும்.

ஏனைய வாகனங்கள் பேக்கரி சந்தியில் திரும்பி அங்கிருந்து ரெம்பிளர்ஸ் வீதியூடாக காலி வீதிக்கு செல்லலாம். அல்லாவிடின் பேக்கரி சந்தி, நிதிமலைச் சந்தி, ஹில் வீதி, காலி வீதியூடாக பயணிக்கலாமென பொலிஸார் தெரிவித்தனர்.  (Supun Dias)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--