2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

குவைத்தில் ஆசிய குழுக்களுக்கிடையே மோதல்; இலங்கையர் ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2011 மார்ச் 02 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குவைத்தில் ஜலீப் சூயுக் என்னும் இடத்தில் பின்னிரவில் ஆசிய குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோசமான சண்டையில் இலங்கையைச் சேர்ந்த 30 வயதான ஒருவர் பலியாகியுள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.

சண்டை நடப்பதாக கேள்விப்பட்டதும் பொலிஸாரும் மருத்துவ உதவிக் குழுவினரும் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தபோது, பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கெனவே வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டனர்.  இவர்கள் வைத்தியசாலைக்கு சென்றபோது ஒருவர் உயிரிழந்துவிட்டார். இவரது கழுத்தில் இரண்டு முறை கத்தியால் குத்தப்பட்டிருந்தது.
 
இச்சம்பவம் தொடர்பில் 8 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இதில் கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் நபரும் அடங்குகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .