Suganthini Ratnam / 2011 மார்ச் 04 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது பிணையில் விடுவிக்க முடியாத பிடியாணையொன்று பிறப்பிக்கப்பட்டதனால், அவர் சென்னை மேல் நீதிமன்றத்தில் முன்பிணை கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இது விசாரணைக்கு வந்தபோது,
'இது மோசமான குற்றச்செயலாக இருப்பதால் இப்போது முன்பிணை வழங்க முடியாது. அத்துடன், இது பிணையில் விடமுடியாத பிணையாகவும் உள்ளது' என நீதியரசர் எஸ்.நாகமுத்து கூறினார்.
எனவே, இந்த பிடியாணையை பிறப்பித்த நீதிமன்றத்தை, பிடியாணையை மீளப் பெறுமாறு கேட்பதே நல்லதென நீதிபதி அமைச்சரின் சட்டத்தரணிகளுக்கு கூறினார்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த ஜுன் மாதம் 2010இல் இந்தியா சென்றபோது விடுதலைப் புலிகள் சார்பான ஒரு குழு, அமைச்சரை கைதுசெய்யக் கோரி மனுவொன்றை தாக்கல் செய்தது.
இந்த மனுவின் காரணமாக அமைச்சர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago