Suganthini Ratnam / 2011 மார்ச் 31 , மு.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவின் கேர்ட்டின் தடுப்பு முகாமிலிருந்த இலங்கை அகதியொருவர் தற்கொலை செய்ய முயன்றபோது உத்தியோகத்தர்களால் காப்பாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கேர்ட்டின் தடுப்பு முகாமிலிருந்த ஆப்கானிஸ்தான் அகதியொருவர் தற்கொலை செய்து கொண்ட 24 மணிநேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த இலங்கை அகதி நேற்று அதிகாலை தோட்டத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார். பின்னர். அங்குள்ள மரமொன்றில் சுருக்கு மாட்டி தொங்கிய நிலையில் அவர் காணப்பட்டார்.
இந்த நிலையில், தடுப்பு நிலைய உத்தியோகத்தர்களால் காப்பாற்றப்பட்ட இலங்கை அகதி சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (DM)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .