Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொட்டாவவிலிருந்து மாத்தறையிலுள்ள கொடகம வரையான அதிவேகப் பாதையில் மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் செல்ல முடியாத ட்ராக்டர்கள், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் போன்ற வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாதென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது யாவருக்கும் பொதுவான வீதியல்ல. இந்த வீதிக்கு பொருத்தமான வாகனங்கள் மட்டும் தான் பெருந்தெருவில் பயணிக்க முடியுமென வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சித் பிரேமஸ்ரீ கூறினார். இந்த வீதியை பயன்படுத்துவது பற்றி பொதுமக்கள், வாகன உரிமையாளர்கள், சாரதிகள், பாதசாரிகள் ஆகியோருக்கு அறிவுறுத்தப்படுமெனவும் அவர் கூறினார்.
இந்த வீதியில் விசேட பொலிஸ் பிரிவு, துணைமருத்துவ சேவையினர், தீயணைக்கும் படை ஆகியவை கடமையிலிருக்கும்.
இந்த விசேட சேவைகள் அமைந்த பின்னரே இந்தத் தெரு பாவனைக்கு விடப்படும். எதிர்வரும் ஒகஸ்ட் மாதமளவில் தான் இது நடைபெறுமென துறைமுகங்கள் பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் சுஜாதா குரே தெரிவித்தார்.
8 minute ago
12 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago