Kogilavani / 2011 ஜூன் 09 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் கேரளக் கரையில் தொழிற்படும் மீன்பிடி படகுகள் மூலம் பெருமளவிலான தமிழர்கள் அவுஸ்திரேலியாவுக்கும் வேறு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் போயுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை விடுதியொன்றில் தங்கியிருந்த 17 இலங்கையரை பொலிஸார் கைது செய்து விசாரித்தபோது இந்த தகவல் கிடைத்துள்ளது.
இலங்கையரை அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த 'சீ குயின்' என்ற படகையும் கேரள பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இப்படகு 25 லட்சம் ரூபாவுக்கு வாங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. பிடிப்பட்ட 17 பேரில் 4 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனையோர் சாட்சிகளாக்கப்பட்டுள்ளனர்.
பிரதி பொலிஸ் மா அதிபர் ஜேக்கப் புனூஸ் கேரள மாநிலத்தில் மனித கடத்தலில் ஈடுபடுவோரென சந்தேகிக்கப்படுவபர்கள் மீது பொலிஸார் கடும் கண்கானிப்பை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
31 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
45 minute ago