2025 ஜூலை 03, வியாழக்கிழமை

கட்டுநாயக்கா மோதல் குறித்து இரு வாரங்களில் அறிக்கை சமரப்பிக்க உத்தரவு

Kogilavani   / 2011 ஜூன் 10 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுப்புன் டயஸ்)

பொலிஸாருக்கும் சுதந்திரவர்த்தக ஊழியர்களுக்குமிடையில் கட்டுநாயக்கவில் நடந்த மோதல் பற்றிய அறிக்கையை தயாரித்து தனக்கு சமர்பிக்குமாறு குற்றப்புலானாய்வு பொலிஸாரை பதில் பொலிஸ் அதிபர் என்.கே.இலங்ககோன் பணித்துள்ளார்.

இச்சம்பவத்தின்போது பொலிஸாரின் நடவடிக்கைகள் பற்றிய பொதுமக்களின் முறைப்பாடுகளை பதிவதற்கான விசேட ஏற்பாடு தொடர்ந்து இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இருநூறுக்கு மேற்பட்ட வாக்குமூலங்களை புலானாய்வுப் பொலிஸார் பதிவு செய்துள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை பொலிஸாரின் வாக்கு மூலங்களாகும்.

இவர்கள் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களிடமிருந்தும் முறைப்பாடுகளை பதிவு செய்தனர். இதேவேளை விசாரணைகள் முடியும் வரை அப்பகுதியில் இராணுவத்தினரும், விசேட அதிரடி படையினரும் சட்டம் ஒழுங்கு என்பவற்றை கவனிப்பர்.

கட்டுநாயக்க மோதலில் காயமடைந்த ஊழியரின் மரணம் தொடர்பில் இரண்டு பொலிஸ் உயரதிகாரிகளை நீர்கொழும்பு நீதவான் ஜுன் 13 வரை விளக்க மறியலில் வைக்கும்படி கட்டளையிட்டார்.

சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களை கட்டுப்படுத்த பொலிஸாரை அனுப்ப வேண்டாமென பாதுகாப்பு செயலாளர் கட்டளையிட்டிருந்த நிலையில் பொலிஸார் அங்கு எவ்வாறு அனுப்பப்பட்டனர் என்பதை விசாரிக்கும்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .