Freelancer / 2026 ஜனவரி 23 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசின் கல்வி மறு சீரமைப்பில் ஆறாம் தர ஆங்கில பாடப் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய விடயம் தவறுதலாக இணைக்கப்பட்டது என்று எவராலும் கூறித் தப்பிவிட முடியாது. இது வேண்டுமென்றே உள்ளடக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. ஹேசா விதானகே தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) அன்று இடம் பெற்ற புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி மறு சீரமைப்பு தொடர்பில் நாட்டு மக்கள் எந்தளவுக்கு அறிந்து வைத்திருக்கின்றார்கள் என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் கல்வி தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுவின் தலைவர் நான். ஆனால் இந்த குழுவுக்கு கூட கல்வி மறுசீரமைப்பு தொடர்பான திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை. புதிய கல்வி மறுசீரமைப்பில் ஐந்து தூண்கள் பற்றி குறிப்பிடப்படுகிறது. இதில் ஐந்தாவது தூணாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் மற்றும் முன்னெடுத்தல் பற்றி குறிப்பிடப்படுகிறது. ஆனால் பாராளுமன்றத்துக்கு கூட விடயங்கள் தெளிவு படுத்தப்படவில்லை.
பாராளுமன்றத்தில் 225 உறுப்பினர்களில் எவரும் புதிய கல்விமாரு சீரமைப்புக்கு எதிராக செயற்படவில்லை. கல்வி மறு சீரமைப்பு வெளிப்படைத்தன்மையானதாக காணப்பட வேண்டும். துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய வகையில் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்பதே எமது வலியுறுத்தல்.
சிறந்த முறையில் கல்வி மறு சீரமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பினர் கூறுகின்றனர் . அவ்வாறானால் ஜனாதிபதி ஏன் அதன் அமுலாக்கத்தை 2027 ஆம் ஆண்டு வரை பிற்போட வேண்டும்? கல்வி மறுசீரமைப்பை ஓரிரு நாட்களில் அமுல்படுத்த முடியாது.புதிய கல்வி மறு சீரமைப்பு தவறானதாக அமைந்தால் ஒட்டுமொத்த மக்களும் குறிப்பாக மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள்.
இதேவேளை கல்வி மறு சீரமைப்பில் ஆறாம் தர ஆங்கில பாடத்திட்டத்தில் சர்ச்சைக்குரிய விடயம் தவறுதலாக இணைக்கப்பட்டது என்று எவராலும் கூறித் தப்பிவிட முடியாது. இது வேண்டுமென்றே உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் என்ன?கல்வி மறு சீரமைப்பை சிறந்த முறையில் கொண்டு வாருங்கள் நாங்கள் அதற்கு ஆதரவளிப்போம் என்றார்.
51 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago