Freelancer / 2026 ஜனவரி 23 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய கல்விக் மறுசீரமைப்பு ஊடாக பௌத்த மதமும் நாட்டின் கலாசாரமும் இல்லாமல் போகும் என்று நாமல் ராஜபக்ச கூறுகின்றார் . தலதா மாளிகைக்கு முன்பாக மண் நிரப்பி ரேஸ் ஓடும் போது பௌத்த மதம் பற்றி ஏன் நினைக்கவில்லை? கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான பணிப்பெண்ணை அலரி மாளிகையில் வைத்துக் கொண்டு மக்களின் வரிப்பணத்தில் அவருக்கு சம்பளம் வழங்கும் போது நாட்டின் கலாசாரம் எங்கே போனது.என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க கேள்வி எழுப்பினார்
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) அன்று இடம் பெற்ற புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
புதிய கல்வி மறுசீரமைப்பை ஜனாதிபதி தான் பிற்போட்டார் . கல்வி மறுசீரமைப்புக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் குறிப்பிடுகிறார்கள். ஆறாம் தரத்துக்கான கல்விக் கொள்கை கடந்த 13 ஆம் திகதி தான் பிற்போடப்பட்டது. இதற்கு முன்னர் நாடளாவிய ரீதியில் போலியான விடயங்களை குறிப்பிட்டு மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்தியது யார்? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச புதிய கல்வி மறுசீரமைப்புக்கு 'ஆபாசமாக்கல்' என்று புதிய பெயரை வைத்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தரம் 11 இற்கான தகவல் மற்றும் தொடர்பாடல் புத்தகத்தில் 77 ஆம் பக்கத்தில் சர்ச்சைக்குரிய விடயங்கள் பல குறிப்பிடப்பட்டுள்ளன.இதில் சர்ச்சைக்குரிய இணையத்தள முகவரிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. மைத்திரி,ரணில், சஜித் அரசாங்கத்தால் தான் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது.இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் அன்று ஏன் எதிர்புத் தெரிவிக்கவில்லை?
புதிய கல்வி மறுசீரமைப்பை அறிமுகப்படுத்திய பிரதமருக்கு எதிராக எதிர்கட்சியினர் மிக மோசமான வகையில் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார்கள். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதாக கூறினார்கள். நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கையொப்பமிட்டு அதனை மேசைக்கு அடியில் வைக்க வேண்டாம். பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்டுக்கொள்கிறேன்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதாக எதிர்க்கட்சியினர் கூறினார்கள் . ஆனால் இன்று எதிர்க்கட்சிக்கு எதிராக மக்கள் நம்பிக்கையில்லா பிரேரணையில் கைச்சாத்திட்டு, போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.மக்கள் இன்று தெளிவாக உள்ளார்கள்.
நாமல் ராஜபக்ச புதிய கல்விக் மறுசீரமைப்பு ஊடாக பௌத்த மதமும் நாட்டின் கலாசாரமும் இல்லாமல் போகும் என்று குறிப்பிடுகிறார். தலதா மாளிகைக்கு முன்பாக மண் நிரப்பி ரேஸ் ஓடும் போது பௌத்த மதம் பற்றி ஏன் நினைக்கவில்லை? கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான பணிப்பெண்ணை அலரி மாளிகையில் வைத்துக் கொண்டு மக்களின் வரிப்பணத்தில் அவருக்கு சம்பளம் வழங்கும் போது நாட்டின் கலாசாரம் எங்கே போனது.
புதிய கல்விக் மறுசீரமைப்பில் காணப்படும் குறை பாடுகள் தொடர்பில் முன்வைக்கப்படும் யோசனைகளை ஏற்றுக்கொண்டு அதனை செயற்படுத்த தயாராகவே உள்ளோம். மாணவர்களுக்கு இடையிலான போட்டியான கல்விக் கொள்கைக்கு பதிலாக உலகுடன் போட்டியிடும் வகையில் புதிய கல்வி மறுசீரமைப்பு நிச்சயம் அமுல்படுத்தப்படும் என்றார்.
43 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago