Super User / 2011 ஜூன் 11 , மு.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியல் தீர்வு காண்பதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்க வேண்டும் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், இந்தியவெளிவிவகார செயலாளர் நிருபமாக ராவ் ஆகியோர் ஆடங்கிய இந்திய உயர் மட்ட தூதுக்குழுவிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கைக்கான விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், இந்தியவெளிவிவகார செயலாளர் நிருபமாக ராவ் ஆகியோர் ஆடங்கிய இந்திய உயர் மட்ட தூதுக்குழுவினருடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தொலைபேசி மூலம் கலந்துரையாடினார்.
இதன் போது இனப்பிரச்சினை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்துத் தெரிவிக்கையில் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைப்பது குறித்த ஆலோசனையை முன்வைத்தார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதன் மூலம் சகல தரப்பினரும் அதில் அங்கம் வகிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகும். எனவே இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் தடைகளற்ற நிலையில் தீர்வினை இத்தூதுக்குழுவின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவித்த அமைச்சர் இத்தெரிவுக் குழுவானது குறிப்பிட்ட ஒரு கால அவகாசத்திற்கு உட்பட்டதாக அமைக்கப்பட வேண்டுமெனவும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமும் இந்த ஆலோசனை முன்வைக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
7 hours ago
8 hours ago
14 Jan 2026
Nethithevan Sunday, 12 June 2011 02:42 PM
இது என்ன .... சம்திங் ராங்? பதினைந்து வருடமாக இலங்கை மந்திரியாக இருக்கின்றார் இதை அந்நிய தேசத்தவரிடம் கேட்கின்றார் .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
14 Jan 2026