Super User / 2011 ஜூன் 12 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழக முதல்வரும் அதிமுக தலைவியுமான ஜெ. ஜெயலலிதா சந்திக்கவுள்ளார். இலங்கைத் தமிழர் விவகாரம் மற்றும் தமிழகத்தில் தான் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறிதது அவர் இந்திய பிரதமருடன் பேச்சு நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையிலான 7 வருடகால உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள சூழலில் இச்சந்திப்பு இடம்பெறுகின்றது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வென்றவுடன் அவருக்கு காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி வாழ்த்துத் தெரிவித்திருந்தார். அதனால் இவ்விரு கட்சிகளும் மீண்டும் நெருக்கமாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் இம்முறை தனது டில்லி விஜயத்தின்போது சோனியா காந்தியை ஜெயலலிதா சந்திப்பாரா என்பது தெரியவில்லை.
10 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago
2 hours ago