2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கதிர்காமர் கொலைச் சதி குறித்து தகவல் கொடுக்காததால் வழக்கு

Menaka Mookandi   / 2011 ஜூன் 14 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(பாரூக் தாஜுதீன்)

முன்னாள் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை கொலை செய்வதற்கான சதியை பொலிஸாருக்கு வேண்டுமென்றே தெரிவிக்க தவறிய மேல்மாகாண மக்கள் முன்னணியின் நிர்வாக செயலாளர் மீது சட்டமா அதிபர் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

நடராசா சிவராசா அல்லது அம்பலவன் என்பவரை கொழும்பு மேல் நீதிமன்றில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் குற்றவாளியாக நிறுத்தியுள்ளார்.

பாஸ்கரன் என்று அழைக்கப்படும் ஒருவர் அப்போதைய வெளிநாட்டமைச்சரான லக்ஷ்மன் கதிர்காமரை கொலை செய்யும் நோக்கில் வேலைக்கமர்த்துவதற்கு பொருத்தமான ஒரு நபரை 2005, ஜனவரி 5 – டிசம்பர் 31 வரையான காலப்பகுதியில் தேடிக்கொண்டிருந்தார் என்பதை நன்கு அறிந்திருந்தும் அதை பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை என நடராசா சிவராசா மீது நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த தகவலை வேண்டுமென்றே பொலிஸாரிடமிருந்து மறைத்தமை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உரியது என சட்டமா அதிபர் கூறினார்.

முன்னாள் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், கடந்த 2005ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி கொழும்பு – 7, புல்லர்ஸ் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .