2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

'பொன்சேகாவின் செவ்வி குறித்து தருஸ்மன் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை'

Super User   / 2011 ஜூன் 16 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(பாருக் தாஜுதீன்)

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரெட்ரிக்கா ஜான்ஸுக்கு  சரத் பொன்சேகா வழங்கிய செவ்வி குறித்து தருஸ்மன் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் ஐ.நா. பிரிவுக்கான பணிப்பாளர் நாயகம் நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக்கொடி வழக்கு நேற்று வியாழக்கிழமை விசாரிக்கப்பட்டபோது வெளிவிவகார அமைச்சின் ஐ.நா. பிரிவுக்கான பணிப்பாளர் நாயகம் சி.ஏ.எச்.எம். விஜேரட்ன சாட்சிமளித்தார்.

பொன்சேகாவின் சட்டத்தரணி நளின் லத்துவஹெட்டியின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில் தான் மேற்படி அறிக்கையை முழுமையாக வாசித்ததாகவும் அதில் 2009.12.13 ஆம் திகதி சண்டே லீடர் பத்திரிகைக்கு சரத்பொன்சேகா வழங்கிய செவ்வி குறித்து எதுவும்குறிப்பிடப்படவில்லை என விஜேரட்ன கூறினார்.

அரசதரப்பு சட்டத்தரணியானன பிரதி சொலிசிற்றர் ஜெனரல் புவனேக அலுவிஹார, சாட்சியை குறுக்குவிசாரணை செய்தபோது, ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கோரிக்கையின்படி நிபுணர் குழு மேற்படி அறிக்கையை தயாரித்ததாகவும் சரத் பொன்சேகாவினால் வழங்கியதாக கூறப்படும் செவ்வியின் அடிப்படையில் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதா என தன்னால் கூறமுடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .