Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜூன் 19 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை தூய்மையான அறையில் வைத்திருக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட இன்று கூறியுள்ளார்.
சரத் பொன்சேகாவின் தேசிய ஜனநாயக முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரான கெட்டகொட இது தொடர்பாக மேலும் கூறுகையில், மாசடைந்த வாயு பொன்சேகாவின் நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மருத்துவர்கள் மேற்படி அறிவுறுத்தலை விடுத்ததாகவும் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் ஞாயிறன்று அவருக்கு மருத்துவ சோதனை நடத்தப்படவிருந்ததாகவும் தெரிவித்தார்.
2006 ஏப்ரலில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் பொன்சேகாவின் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிருமிகள், பக்ரீறியா இல்லாத தூய்மையான அறையில் பொன்சேகாவை தங்கவைக்குமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கெட்டகொட கூறினார். (KB)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .