2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

இசைப்பிரியா, புலிகளின் போராளி: பாதுகாப்பு அமைச்சு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 20 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர் என சனல் 4 அலைவரிசையினால் கூறப்பட்ட இசைப்பிரியா தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகளில் ஒருவர் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர் புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளியே தவிர, சனல் 4 அலைவரிசையினால் கூறப்பட்டவாறு அப்பாவி சிவிலியன் அல்ல என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இசைப்பிரியா, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உயர்மட்ட உறுப்பினராக இருந்ததாகவும் ஆனால், அவர் இதயநோய் காரணமாக ஒரு பேராளியாகவன்றி ஊடகவியலாளராக மட்டுமே தொழிற்பட்டதாகவும் சனல் - 4 கூறியிருக்கின்றது.

இசைப்பிரியா 1982ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்த அவர் வன்னியில் இராணுவ பயிற்சியை மேற்கொண்டார். விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவில் பணியாற்றிய அவர் பின்னர் 'புலிகளின் குரல்' வானொலியில் சேர்ந்துகொண்டார்.

இலங்கை விமானப்படை - புலிகளின் குரலை தாக்கி அழித்த பின் இலங்கை அரசாங்கம் யுனெஸ்கோவுக்கு 2007ஆம் ஆண்டு ஒரு அறிக்கையை கொடுத்தது. இந்த அறிக்கையில் புலிகளின் குரல் விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியெனவும் இந்த தாக்குதலில் இறந்தவர்கள் புலிகளின் இராணுவ நடவடிக்கைகளில் பங்குகொண்டவர்களென்று இனங்காணப்பட்டனரெனவும் தெளிவாக கூறப்பட்டிருந்தது.

இசைப்பிரியாவின் சேவையை பாராட்டி புலிகள் இயக்கம் அவரை லெப்ரினன்ற் கேணல் தரத்துக்கு உயர்த்தியது. இசைப்பிரியா கடற்புலியான ஸ்ரீராம் என்பரை திருமணம் செய்தார். ஸ்ரீராம் திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட கடற்புலி தலைவராக இருந்தவர்.

படத்தில் காட்டப்பட்டுள்ள, புலிகளால் இசைப்பிரியாவுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை அவர் இராணுவ சீருடையில் இருப்பதை காட்டுகின்றது. இது அவர் விடுதலைப் புலிகளின் இராணுவத்தில் இருந்தாரென்பதை உறுதி செய்கின்றது.

இசைப்பிரியா கரும்புலிகள் உருவாக காரணமாக இருந்தவரென்றும் அவர்களை போற்றிப் புகழ்ந்தவர்களென்றும் சனல் -  4 கூறியுள்ளது. இது பிழையாக வழிநடத்தப்பட்டு தமது உயிரை மாய்த்துக்கொண்ட கரும்புலிகளின் செயலை விட மோசமானது.

இசைப்பிரியா புலிகள் இயக்கத்தில் முழுதாக தன்னை இணைத்துக் கொண்டவரென்பதை நன்கறிந்திருந்தும் அவர் ஒரு ஊடகவியலாளர் மட்டுமேயெனக் கூறி உண்மைமைகளை மூடி மறைக்க 'சனல் 4' முயல்கின்றது. (DM)


  Comments - 0

 • ajan Monday, 20 June 2011 10:36 PM

  இது லங்காவுக்கு கைவந்த கலை.

  Reply : 0       0

  Hot water Monday, 20 June 2011 11:12 PM

  சனல் 4 வீடியோ காட்சிகள் உண்மையா பொய்யா என்பது குறித்துதானே பிரதான விவாதம்?

  Reply : 0       0

  Guest Tuesday, 21 June 2011 02:41 AM

  இவர் போராளியோ.. இல்லையோ... அது இல்ல பிரச்சினை, இவர் கொல்லப்பட்டவிதம். ஆடைகள் அகற்றப்பட்டு, துஷ்பிரயோகம் செய்யப்பட்டதற்கான அடையாளங்களுடன், பிணமாக சேனல் 4 இல் காண்பிக்கப்பட்டது.

  Reply : 0       0

  Ramesh Tuesday, 21 June 2011 03:42 AM

  சனல் 4 என்ன பதில் சொல்லப் போகிறது?

  Reply : 0       0

  NAKKIRAN Tuesday, 21 June 2011 03:28 PM

  கடைசியில் தாங்கள்தான் படுகொலை செய்ததை இதன் முலம் ஒப்பு கொண்டுவிட்டார்கள் . இது முதற் படி . நன்றி கோதா .

  Reply : 0       0

  ruthrar Tuesday, 21 June 2011 04:36 PM

  இவர் விடுதலை புலி என்பதை மட்டுமே அரசாங்கம் பார்க்கின்றது. அவர் ஒரு பெண் என்பதை இந்த அரசாங்கம் மறந்துவிட்டது. அப்படியெனில் அவர் கொல்லப்பட்ட விதம் சரியென்று அரசாங்கம் கூற முயல்கின்றதா?

  Reply : 0       0

  mafas Wednesday, 22 June 2011 01:39 AM

  பெண்ணோ ஆணோ மற்றேவர்களின் உயிரை கொண்டவர் அவரும் செத்தே ஆக வேண்டும் அதன் நீதி.....

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X