2025 ஜூலை 10, வியாழக்கிழமை

பான் கீ மூனின் இலங்கை விஜயம் சரியாக காட்டப்படவில்லை

Menaka Mookandi   / 2011 ஜூன் 22 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரித்தானிய செனல்  - 4 செய்திச் சேவையினால் தயாரிக்கப்பட்ட 'இலங்கையின் கொலைக்களம்' என்ற ஆவணப்படத்தில் ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இலங்கையின் வடபகுதிக்கு செய்த விஜயம் சரியாக காட்டப்படவில்லையென ஐக்கிய நாடுகள் சபை இன்று தெரிவித்தது.

'செயலாளர் நாயகம் அவசரமானதாக இல்லாதொரு விஜயமொன்றை மேற்கொண்டு ஓர் அகதி முகாமுக்கு சென்றார். அந்த முகாமிலிருந்த அகதிகள் சிலருடன் அவர் பேசினார். இந்த விஜயம் அந்தப் படத்தில் சரியாக காண்பிக்கப்படவில்லையென செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மாட்டின் நெஸெர்கி ஊடகங்களுக்கு கூறினார்.

ஐ.நா. நியமித்த குழுவின் அறிக்கையை அவரே அலட்சியப்படுத்துகின்றாரென்ற கருத்தை நிராகரித்த நெஸெர்கி, இலங்கையின் தேசிய பொறிமுறையூடாக நடைபெறும் தொடர்ச்சியான செயல்முறையை ஐ.நா.செயலாளர் நாயகம் அவதானித்து வருவதாகவும் தெரிவித்தார்.

நாம் அந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் சம்மதம் அல்லது சர்வதேச அமைப்பு ஒன்றின் பணியாணை தேவை. இதேவேளை ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு செனல் - 4 ஆவணப்படம் பற்றி விளக்கப்பட்டுள்ளது. அவருக்கு அதுபற்றி தெரியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0

  • aju Wednesday, 22 June 2011 07:50 PM

    இவரை சரியாக காட்டவில்லை என்பது தான் இப்போது பிரச்சனை ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .