2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு

Menaka Mookandi   / 2011 ஜூன் 22 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழக மீனவர்கள் சிலர் இலங்கை பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்களால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டங்களால் இலங்கைத் தூதரகத்துக்கு எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாதிருக்கும் வகையில் இந்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக மேற்படி செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23பேரும் அவர்களது ஐந்து படகுகளும் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் மேற்படி மீனவர்கள் 23பேரையும் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் திருமதி கே.ஜீவராணி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • unmai Thursday, 23 June 2011 04:13 AM

    சட்டத்தை மீறுபவர்களுக்கு வெற்றிலை பாக்கு கொடுத்து வரவேற்கவா? சட்டம் தன் கடமையை செய்யும் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .