Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Super User / 2011 ஜூன் 23 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சந்துன் ஏ ஜயசேகர)
ஊடக சுதந்திரம் மற்றும் பங்குபற்றல் ஜனநாயகம் என்பவற்றை முன்னேற்றுவதற்காக தகவல் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கான சட்டமொன்றை கொண்டுவரவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தவலறியும் சுதந்திரத்திற்கான சட்டமூலமொன்றை ஐ.தே.க. பிரதித்தலைவர் கரு ஜயசூரிய தனி நபர் பிரேரணையாக கொண்டுவர மேற்கொண்ட முயற்சியை தோற்கடித்த இரு நாட்களின்பின் அரசாங்கம் இவ்வறிவிப்பை விடுத்துள்ளது.
"கருத்துச் சுதந்திரம், தகவலறியும் சுதந்திரம் ஆகியவற்றை பலப்படுத்துவதற்கு அரசாங்கம் தயங்கவில்லை. தகவலறியும் சுதந்திர விவகாரம் குறித்து நாம் நீண்டகாலமாக கலந்துரையாடி வருகின்றோம். ஊடகங்கள், அரசியல் கட்சிகள், சிவில் சமூகம் உட்பட ஆர்வமுள்ள அனைத்து தரப்பினருடனும் இது குறித்து கலந்துரையாடுவதற்கு எதிர்பார்க்கிறது" என அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.
தகவலறியும் சுதந்திரத்திற்கான சட்டமூலத்தை அரசாங்கம் வரைந்து வருவதாகவும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடியபின் அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ruthra Thursday, 23 June 2011 11:33 PM
அறிமுகப்படுத்தினால் மட்டும் போதாது. அந்த உரிமையை சுதந்திரமாக அனுபவித்தற்கான சந்தர்ப்பத்திற்கும் அரசாங்கம் வழிவகுக்க வேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago