Editorial / 2026 ஏப்ரல் 30 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெண் மருத்துவர்கள் குளிப்பதைப் பதுங்கியிருந்து இரகசியமாகப் படம்பிடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், இலங்கை 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரர்கள் இருவரை நாரஹேன்பிட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாரஹேன்பிட்ட பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த பெண் மருத்துவர்களே இச்சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். குறித்த மருத்துவர்கள் அங்கு நடைபெற்ற தொழில்முறை மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக அந்த விடுதியில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளின்படி, சந்தேகநபர்கள் தமது கைபேசிகளைப் பயன்படுத்தி, குளியலறை துவாரங்கள் ஊடாக மருத்துவர்களைப் படம்பிடித்துள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன், அவர்கள் அங்கிருந்த ஆண்களையும் அவ்வாறே காணொளி பதிவு செய்துள்ளமை மேலதிக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட இந்தக் காணொளிகள் இணையத்திலோ அல்லது சமூக வலைதளங்களிலோ பதிவேற்றப்பட்டுள்ளனவா அல்லது மற்றவர்களுடன் பகிரப்பட்டுள்ளனவா என்பது குறித்து பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, நீதிமன்றம் அவர்களுக்குப் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
4 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago