Super User / 2011 ஜூன் 23 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கெலும் பண்டார)
உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியின்போது இலங்கை அணி வீரர் உபுல் தரங்கவுக்கு ஊக்கமருந்தை சிபாரிசு செய்ததாக கூறப்படும் டாக்டர் எலியந்த வைட்டிற்கு எதிராக விசாரணை நடத்துமாறு அரசாங்கத்தை ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது.
முழு விளையாட்டுத்துறையும் ஊழலினாலும் பல்வேறு முறைகேடுகளாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க நேற்று வியாழக்கிழமை கூறினார்.
சர்வதேச மட்டத்தில் பதக்கங்களைப்பெற்று நாட்டிற்கு புகழ்தேடிக் கொடுத்த பல விளையாட்டு வீரர்கள் தற்போது தமது விளையாட்டு செயற்பாடுளை முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
"1940 ஆம் ஆண்டின் பின்னர் பொதுநலவாயப் போட்டியொன்றில் நாம் தங்கப்பதக்கமொன்றை வென்றோம். ஆனால் அப்பதக்கத்தை வென்ற மஞ்சு வன்னியாரச்சியின் பதக்கம் பறிக்கப்பபட்டுள்ளது. விசேட மருத்துப் பிரிவுவொன்றுஇருந்தபோதிலும் எமது விளையாட்டு நட்சத்திரங்கள் இப்பிரச்சினையை எதிர்நோக்குகின்றனர்.
மஞ்சு வன்னியாரச்சிக்கு சிகிச்சையளித்த மருத்துவருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் முயற்சிப்பதாக ஊடங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படியானால் உபுல் தரங்கவுக்கு சிகிச்சையளித்த டாக்டர் எலியந்த வைட்டிற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள ஏன் முடியாது?" என அநுரகுமார திஸாநாக்க கேள்வி எழுப்பினார்.
இந்நபர் உலகக்கிண்ணப் போட்டிகளின்போது இலங்கை அணியுடன் இந்தியாவுக்குச் சென்றதாகவும் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இலங்கை அணித்தலைவர் குமார் சங்கக்காரவின் கோரிக்கையின் பேரிலேயே அவர் இந்தியாவுக்கு சென்றதாக செய்திகளில் நாம் அறிந்தோம். இது வேடிக்கையானது. சங்கக்காரவுக்கு அவருக்கு விருப்பமான அணியை தெரிவுசெய்ய அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இந்த மருத்துவருக்கான கோரிக்கையை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்|' எனஅவர் கூறனார்.
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago