2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

ஜனாதிபதி தென்சூடானுக்கு வாழ்த்து

Suganthini Ratnam   / 2011 ஜூலை 16 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிதாக உதயமாகியுள்ள தென்சூடானுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தென்சூடானின் வரலாற்றுப் புகழ்மிக்க இந்த வெற்றியில் இலங்கையும் பங்கெடுத்துக்கொள்கிறது. இரு தரப்பு  உறவை வலுப்படுத்திக்கொள்வதற்கு பூரண  ஒத்துழைப்பு வழங்கப்படுமெனவும் தென்சூடான் ஜனாதிபதி ஜெனரல் சல்வா கீர் மயார்டீட்டிற்கு  ஜனாதிபதி அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

புதிதாக ஆபிரிக்காவின் 54ஆவது நாடாக தோற்றம்பெற்ற தென்சூடானின் சுதந்திரதினக் கொண்டாட்ட நிகழ்வுகள்; கடந்த 9ஆம் திகதி நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.  (DM)


  Comments - 0

  • IBNU ABOO Sunday, 17 July 2011 06:02 AM

    பிரிவினை போராட்டத்தில் வெற்றிபெற்ற நாட்டுக்கு எமது நாட்டு ஜனாதிபதி வாழ்த்து அனுப்பியது எந்த கொள்கை அடிப்படையில் என்றுதான் புரியவில்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--