2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

இலங்கையர் சகிதம் கப்பல் கடத்தல்

Super User   / 2011 ஜூலை 18 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எண்ணெய்த் தாங்கி கப்பலொன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள்  கடத்தியுள்ளதாக சோமாலியாவுக்கான ஐரோப்பிய ஒன்றிய கடற்படை இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

எம்.வி. ஜுபா எக்ஸ்எக்ஸ் எனும் இக்கப்பல் நேற்று ஞாயிற்றுக்கிழமை கடத்தப்பட்டதாகவும் அதில் 16 ஊழியர்கள் இருந்ததாகவும்  ஐரோப்பிய ஒன்றிய கடற்படை தெரிவித்துள்ளது.

இவர்களில் ஒரு இலங்கையர், 5 இந்தியர்கள், பங்களாதேஷ் நாட்டவர்கள் மூவர், சோமாலியர்கள் நால்வர், கென்யா, சூடான், மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0

 • IBNU ABOO Tuesday, 19 July 2011 02:47 AM

  ஈராக்கையும் ஆப்கானிஸ்தானையும் அடக்க முயற்சிக்கும் நேட்டோவுக்கு இந்த பஞ்ச நாட்டு கடற்கொள்ளையர்களை அடக்க முயற்சிக்காமல் இத்தனை நாள் ஏன் விட்டு வைத்திருக்கிறார்களே .இதில் எதோ மர்மம் உள்ளது. பஞ்சம் காரணமாக சோமாலியா அரசுதான் இதை ஒரு தொழிலாக முகவர்களை போட்டு செய்கிறதோ.

  Reply : 0       0

  abulbasith Tuesday, 19 July 2011 08:21 PM

  இவற்றில் நேட்டோவும் பங்குதாரா்களா இருக்கக்கூடும். இவை எல்லாம் உபாமாவின் தலைமைத்துவத்தின் பின்புதான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இஸ்லாமியர்களை கவிழ்ப்பதே இவர்களின் வேலை. இவர்களுக்கு உதவியாக எல்லாநாட்டிலும் எட்டப்பன்கள் எப்போது உணரப்போகின்றார்களே ?

  Reply : 0       0

  Hamza Wednesday, 20 July 2011 07:52 PM

  இது ஒரு விதமான தந்திரோபாயக் கொள்ளை.. அவர்களுக்கு தேவை பணம், பொருள் அன்றி மனித உயிர்கள் தேவையில்லை. ஆனால் சோமாலிய கடற் கொள்ளையர்கள் குறிப்பிட்ட சில காலமாக செய்து வரும் தொழில் இது. நாம் நினைப்பது போன்று இலகுவில் தீர்ந்து போகக் கூடிய பிரச்சினை அல்ல இது, தவிர்த்துக்கொள்ள நிறைய வழிகள் உண்டு. ஒரு எண்ணெய்க் கப்பலை கடலிலே கொள்ளையர்கள் திசை திருப்புவதோ அல்லது கடத்துவதோ இலகுபட்ட விடயமல்ல. இதில் மர்மம் ஒன்றும் இல்லை,,,,,, ஆப்கான், ஈரான் , ஜப்பான் போன்ற நாடுகளை எதிர்த்தவர்களுக்கு இது ஒன்றும் பெரிய விடயமல்ல.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--