2026 ஜனவரி 09, வெள்ளிக்கிழமை

’கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றினால் நேட்டோ உடைந்து சிதறும்’

Freelancer   / 2026 ஜனவரி 08 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றினால் நேட்டோ கூட்டமைப்பு உடைந்து சிதறும் என்று டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐரோப்பிய நாடான டென்மார்கின் கட்டுப்பாட்டின் கீழ் தன்னாட்சி பெற்ற பகுதியாக கிரீன்லாந்து செயல்படுகிறது. இது உலகின் மிகப்பெரிய தீவு ஆகும். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தீவு அமெரிக்காவுடன் இணைக்கப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் அண்மையில் தெரிவித்தார்.

இதுகுறித்து டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் கருத்து தெரிவிக்கையில்,

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு நேட்டோ கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் அமெரிக்காவும் டென்மார்க்கும் இடம் பெற்றுள்ளன. நேட்டோ கூட்டமைப்பின் ஒப்பந்தத்தின்படி உறுப்பு நாடுகள் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தக்கூடாது. ஏதாவது ஓர் உறுப்பினருக்கு ஆபத்து என்றால் ஒட்டு மொத்த நேட்டோ நாடுகளும் களமிறங்கும்.

தற்போது டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்து தீவு அமெரிக்காவுக்கு தேவை என்று ட்ரம்ப் கூறுகிறார். இது நேட்டோ கூட்டமைப்பு ஒப்பந்தத்துக்கு எதிரானது. இதை ஒருபோதும் ஏற்க மாட்டோம். வெனிசுலா நாட்டுடன் கிரீன்லாந்தை ஒப்பிட முடியாது. ஒரு வேளை, கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றினால் நேட்டோ கூட்டமைப்பு உடைந்து சிதறும் என்று தெரிவித்தார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .