Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 14 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல பொலிஸ் நிலையங்களில் செய்யப்படும் முறைப்பாடுகள் குறித்து கவனத்திற்கொள்ளப்படுவதில்லையென பொதுமக்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பொலிஸ் திணைக்களத்தினால் திறனற்ற பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது குறித்து தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் ஐ.ஜி.பி. என்.கே.இலங்கக்கோன் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் திணைக்களத்தின் செயற்றிறன் மற்றும் திறன்களை அதிகரிக்கும் வகையிலான பாரிய மறுசீரமைப்புத் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
சில பொலிஸ் நிலைங்களுக்கு தாம் திடீரெனச் செல்லவுள்ளதாகவும் திறனற்ற வகையில் செயற்படும் பொலிஸ் திணைக்களங்களைக் கண்டுபிடிப்பதே இதன் நோக்கமெனவும்; என்.கே.இலங்கக்கோன் குறிப்பிட்டுள்ளார்.
எமது பொலிஸ் சேவையானது பொதுமக்களுடன் நட்புறவுடன் பழகி அவர்களின் பிரச்சினையை தீர்த்துவைப்பதே ஆகும். எனவே, திறனற்ற வகையில் செயற்படுவதாகத் தெரிவிக்கப்படும் பொலிஸ் நிலையங்களை குறைக்கவுள்ளோமென ஐ.ஜி.பி. என்.கே.இலங்கக்கோன் தெரிவித்துள்ளார்.
meenavan Wednesday, 14 September 2011 11:54 PM
I.G.P.யை இந்த வருடத்திற்க்கானஇ சிறந்த கண்டுபிடிப்பாளருக்கான பரிசுக்கு சிபார்சு செய்யலாம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .