2021 மே 15, சனிக்கிழமை

முஸ்லிம் பிரதிநிதிகளை ரொபட் பிளெக் சந்திக்காமைக்கு கண்டனம்

Super User   / 2011 செப்டெம்பர் 14 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளெக் முஸ்லிம் பிரதிநிகளை சந்திக்காமை தொடர்பில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

"இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அமெரிக்கா அக்கறை கொண்டிருந்தால் முஸ்லிம்கள் சார்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை கட்டாயம் சந்தித்திருக்க வேண்டும்" என அக்கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்பட்ட யுத்தத்தினால் முஸ்லிம்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் இடம்பெயர்ந்தும் உள்ளனர். இவர் தொடர்பிலாவது அமெரிக்கா அக்கறை செலுத்தியிருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இலங்கை முஸ்லிம்களுக்கு பல வழிகளில் அமெரிக்கா உதவியுள்ளது. இந்நிலையில் வடக்கில் இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம்களையாவது ரொபட் ஓ பிளெக் சத்தித்திருக்கலாம் என அவர் கூறினார்.

எவ்வாறாயினும் ரொபட் ஓ பிளெக் விஜயத்தின் போது முஸ்லிம் பிரதிநிதிகளை இம்முறை சந்திக்காமைக்கான காரணம் இதுவரை தெரியாமல் உள்ளதாக பிரதியமைச்சர் சேகுதாவூத் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்காவின் தலைவர் என்.எம்.அமீன்,

"ரொபட் ஓ பிளெக் முஸ்லிம் பிரதிநிகளை சந்திக்காமை தொடர்பில் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா கடும் அதிருப்தி தெவிக்கின்றது. யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்து தமிழ் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்த அவரால் ஏன் முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்திக்க முடியாமல் போயுள்ளது?" என கேள்வி எழுப்பினார்.

"முஸ்லிம் பிரதிநிதிகளை ரொபட் ஓ பிளெக் சந்தித்திருக்கும் பட்சத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்களின் பிரச்சினைகளை அமெரிக்க அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்க முடியும்.  வெளிநாட்டு பிரதிநிதிகள் முஸ்லிம் சமூக பிரதிநிதிகளை சந்திக்காமல் புறக்கணிப்பது கவலையளிக்கிறது" எனவும் அமீன் கூறினார்.

முஸ்லிம் பிரதிநிதிகளை ரொபட் ஓ பிளெக் சந்திக்காமை மூலம் தமிழ் சமூகத்தின் பிரச்சினைகளை மாத்திரமே அறிய இலங்கை வந்துள்ளார் என அறிய முடிவதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பொது செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.முபாரக் தெரிவித்தார்.

இது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலய அதிகாரிகளிடம் தொடர்பு கொண்ட போது, அவர்கள் கருத்து கூற மறுத்து விட்டனர்.

இலங்கைக்கான மூன்று நாள் விஜயம் மேற்கொண்ட ரொபட் ஓ பிளெக் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியதுடன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

 • IFHAM Thursday, 15 September 2011 01:37 AM

  இங்கு முஸ்லிம்களிடம் சொரண்டும் அளவுக்கு வளம் இல்ல அதுதான் சந்திக்க இல்ல. அல்லாஹுக்கு தேங்க்ஸ் சொல்லணும்.

  Reply : 0       0

  anas Thursday, 15 September 2011 02:26 AM

  நாம்தான் கூட்டிவிட்டு கூத்துப்பாக்கும் அமெரிக்ககாபிரை நாம்தான் ஒதுக்கி வைக்க வேண்டும் நடப்பதை நலமாக எண்னுவோம்.

  Reply : 0       0

  Anwer Noushard Thursday, 15 September 2011 04:18 AM

  அமைச்சர் பசீர் அவர்களையும் முஸ்லிம் காங்கிரசின் செயட்பாடுகலையும் நடுநிலையாக நின்று விமர்சித்திருக்கிறேன். இருப்பினும் இந்த சந்தர்ப்பத்தில் சும்மாவாவது இத்க்கதைக்க யாருக்குமே தோன்றாத போது ..... ஆண்டாண்டு காலமை வீர வசனம் பேசுபவர்களை விட, ஒரு நிமிடம் கொள்கைக்காய் போராடியவன் போராளிதான். இப்போ உங்க அரசியலில் முதிர்ச்சி தெரியுது சேர். அல்கம்து லில்லாஹ்

  Reply : 0       0

  Anwer Noushard Thursday, 15 September 2011 04:20 AM

  போராளிகள் என்ற போர்வில் இருக்கின்றவர்களை காட்டிலும் இவர் எத்தனையோ மடங்கு ஒ.கே தானே சகோதரர் குலதுரன்

  Reply : 0       0

  Nusky Thursday, 15 September 2011 04:28 AM

  காரணம் - A : "தனித்து" இருந்து இருக்கணும் சேர்...!!அப்பதான் நீங்க யாருன்னு தெளிவா விளங்கும்.. அரை மந்திரி பதவிகளுக்காக நீங்கள் அரசுடன் இணைந்து கொண்டால் உங்களை அரசப் பிரதிநிதிகளாகவே சர்வதேசம் பார்க்கும் சேர்....!!
  காரணம் -B : அப்படி அவர் சந்திப்பதன்றால், முஸ்லிம்களின் எந்த தலைவரை சந்திப்பது...? அந்த குழப்பத்துல கூட திரும்பி போயே இருக்கலாம்......... what a shame..!!!

  Reply : 0       0

  Risvi Thursday, 15 September 2011 04:35 AM

  நமக்குத்தான் எந்த பிரச்சினையும் இல்லையே . நமது மக்களின் பிரச்சினை என்பதெல்லாம் வெறும் மாயைதானே? எதற்கு அவர் நம்மை சந்திக்க வேண்டும்?

  Reply : 0       0

  Anwer Noushard Thursday, 15 September 2011 04:56 AM

  நமக்கு பிரச்சினையே இல்லை என்பவர்கள் இருக்கும் போது ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன. சமமூகத்தையும் கொஞ்சம் பாருங்க ரிஸ்வி சகோதரரே.

  Reply : 0       0

  SK Thursday, 15 September 2011 08:23 AM

  பெரும்பாலான முஸ்லிம் பா. ம. உறுப்பினர்களை அரசாங்க வாங்கி விட்டது இனி யார் போய் அவர்களின் பிரச்சினையை உலகுக்கு எடுத்து சொல்லுவது? எது எப்படியோ எல்லாம் நடந்து முடியும் வரை இருந்து விட்டு இப்போ சும்மா கதை சொல்லுகிறார்கள்... ஐயா பெரியவர்களே இனியாவது வரும் வரை இருக்காமல் தைரியமாக பிரச்சினைகளை உலகுக்கு எடுத்து கூறுங்கள்...

  Reply : 0       0

  S.Abdeen Thursday, 15 September 2011 12:15 PM

  முஸ்லிம்களின் பிரச்சினையை முஸ்லிம் காங்கிரஸ் சர்வதேச மயப்படுத்த திட்டமிட்ட நடவடிக்கைகள் அவசியமாகும். இனியாவது அது ஒரு ஒழுங்கில் நடைபெறுமா?

  Reply : 0       0

  oru muslim sagotharan Thursday, 15 September 2011 04:11 PM

  அல் குரானையும் அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையையும் மட்டும் இஸ்லாமாக ஏற்று வாழும் முஸ்லிம்களுக்கு அல்லஹ்வின் உதவியை அன்றி யாருடைய உதவியும் தேவையில்லை. யார் அல்லாஹ்வின் எதிரிகளான யூதர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வார்களோ அவர்களும் அவர்களை சார்ந்தவர்களே என்ற குரானிய வசனத்தை நினைவுறுத்துகிறேன். பெயர் தங்கி முஸ்லிம்களாக இல்லாமல் உண்மை முஸ்லிம்களாக வாழ அல்லாஹ்வை பிரார்த்திக்குறேன்

  Reply : 0       0

  Mark Wilson Thursday, 15 September 2011 07:25 PM

  முஸ்லிம் காங்கிரஸ் என்ன நோக்கத்துக்காக பேசினாலும் aj க்கு என்ன பிரச்சினை.......?

  Reply : 0       0

  sahabdeen Saturday, 17 September 2011 08:47 AM

  முதலாவது யாரு முஸ்லிம்களின் பிரதிநிதி ? இரண்டாவது அமெரிக்காவினால் எதுவும் செய்ய முடியாது. அவர்களே சீனாவின் உதவியுடன் காலம் போய்கொன்டு இருக்கிறார்கள்

  Reply : 0       0

  AJ Thursday, 15 September 2011 08:09 PM

  அதை மக்களுக்கு நல்லது செய்கிறோம், மக்களுக்கு குரல் கொடுக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு பேசகூடாது @mark

  Reply : 0       0

  xlntgson Thursday, 15 September 2011 09:02 PM

  aj முஸ்லிம் காங். அரசியல் பண்ணுவது தெரியாத கதையா, நீங்கள் அரசியல் நோக்கம் இல்லாதவரா? நீங்கள் ஏன் மனோ கணேசனை பின் தொடர்கிறீர்கள்? இதைக் கேட்கும் நான் ரவுப் ஹக்கீமை கடுமையாக விமர்சிப்பவன்!

  Reply : 0       0

  Anwer Noushard Wednesday, 14 September 2011 10:51 PM

  முஸ்லிம்களை அவங்க சந்திக்காம விடுவதே சிறப்பு. பின்பு பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தை இலங்கையிலும் தொடங்கிடுவாங்க சேர். முஸ்லிம் காங்கிரஸ் மட்டும் தான் குரல் கொடுக்கணும் என்பதற்கு நீங்க இன்னுமொரு தரம் சாட்சி. சபாஸ் பசீர் அமைச்சர் அவர்களே.

  Reply : 0       0

  meenavan Wednesday, 14 September 2011 11:24 PM

  நீலிக்கண்ணீர் வடிக்க தொடங்கிட்டார்களா? என்னே சமூக உணர்வு, சில மாதங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்ட பயணம், சூறாவளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ரொபேர்ட் ஓ பிளெக் நிகழ்ச்சி நிரல்களும் முன்கூட்டியே தயாரிக்கப்பட்டது. அரச பங்காளியாக இருந்து கொண்டு இவைபற்றி கரிசனை இல்லாதிருந்து ஒ பிளெக் தனது நாட்டிக்கு திரும்பிய பின்னர் இப்போது சூடு சுரணை இன்றி முஸ்லிம் பிரதிநிதிகளை ஒ பிளெக் சந்திக்கவில்லை என ஏன் கூக்குரலிடுகிறார்கள்?

  Reply : 0       0

  aj Wednesday, 14 September 2011 11:25 PM

  முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் நோக்கம் கொண்டு பேசுகிறத மாதிரி தெரிகிறது.

  Reply : 0       0

  kulathooran Wednesday, 14 September 2011 11:36 PM

  அவரும் பழைய இயக்க போராளிதானே அன்வர்.

  Reply : 0       0

  rakkish.. Thursday, 15 September 2011 12:26 AM

  நீங்க பிரச்சினை இருக்கிறது என்பதை வெளி உலகுக்கு கொண்டு சென்றிருந்தால் தானே தெரியும்.. அவர் நினைத்திருக்கலாம் முஸ்லிம் பிரதிநிதிகள் எல்லாம் அமைச்சர்களும், கல்விமான்களும், அவர்களால் அரசுடன் இணைந்து நின்று சாதிக்க முடியும் என்று?? மு.க.தலைவர் மக்கள் நிம்மதியில்லாமல் தவிக்கும் போதும் அது வதந்தி என்று அறிக்கை விட்டவர் தானே??? ஆனால் த.தே.கூ.???

  Reply : 0       0

  Ullam Thursday, 15 September 2011 12:40 AM

  அவர் சந்தித்தா என்ன சந்திக்காட்டி என்ன..... விசேசமாக ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை. இவரால் தீர்வுகிடைக்கும் என்று நம்புகிறவர்கள் பாவம். அவர்களுக்கு அமெரிக்க அரசியல் தெரியாது போல... எனக்கு சிரிப்பு வருகிறது.....

  Reply : 0       0

  Whistle Blower Thursday, 15 September 2011 01:07 AM

  ஆஹா , ஒரு போட்டோ எடுக்க சந்தர்பம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் , இன்னும் தேர்தல் காலம் போஸ்டர் இக்கு போட்டோ ஆகி இருக்கும் , பாவம் , யசுசி அகாசி வருவார் , அவரோடு எடுங்கோ .

  Reply : 0       0

  Brooms Thursday, 15 September 2011 01:11 AM

  வீட்டுல சண்டை போல இருக்கு விடுங்கப்பா.......

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .