2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

பிரித்தானிய விஸாவுக்காக போலி ஆவணம் சமர்ப்பித்த மாணவி கைது

Super User   / 2011 செப்டெம்பர் 19 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரித்தானிய விஸா பெறுவதற்காக போலி கல்விச் சான்றிதழை சமர்ப்பித்த இலங்கை மாணவியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானிய எல்லை பாதுகாப்பு முகவரம் இவ்விவகாரத்தை இலங்கை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளது.

போலி ஆவணத்திற்காக தான் முகவர் ஒருவருக்கு பணம் செலுத்தியதாக இவ்விண்ணப்பதாரி தெரிவித்துள்ளார்.
இம்மாணவி பொலிஸ் விசாரணையை எதிர்நோக்குவதுடன் பிரிட்டனுக்கு செல்வதில் 10 வருடகாலத் தடையையும் எதிர்நோக்குகிறார்.

பிரித்தானிய எல்லை பாதுகாப்பு முகவரக விஸா விண்ணப்ப பரிசீலனை அதிகாரி கிளேரி முர்ரே இது தொடர்பாக கூறுகையில், "தயவு செய்து போலி ஆவணங்களை சமர்ப்பிக்கவோ அல்லது அப்படி செய்யலாம் எனக் கூறுபவர்களுக்கு செவிமடுக்கவோ வேண்டாம்.  ஆவணங்களை நாம் மிகக் கவனமாக பரிசீலிப்போம். மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டால் போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ள நாம் தயங்க மாட்டோம்" எனக் கூறியுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X