2021 மே 15, சனிக்கிழமை

'முக்கியஸ்தர்களின் வாகனங்களினால் பொதுமக்களுக்கு அசௌகரியம்'

Super User   / 2011 செப்டெம்பர் 21 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முக்கியஸ்தர்களின் வாகனங்களினால் எழுப்பப்படும் ஒலி மற்றும் ஒளி வீசும் ஹெட் லைட் காரணமாக வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோன் தெரிவித்தார்.

இதனால் வாகன சாரதிகள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக 119 இலக்க தொலைபேசி சேவைக்கு பல முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பகல் அல்லது இரவு நேரங்களில் ஒளி வீசும் ஹெட் லைட்டினால் அசௌகரியங்களை ஏற்படுத்துவது வாகன போக்குவரத்து சட்டத்தின் கீழ் குற்றமாகும். பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இவ்வாறு செயற்படுபவர்கள் தண்டிக்கப்படுவர் என அவர் கூறினார்.

ஒரு வாகன தொடரணியில் எத்தனை வாகனங்கள் செல்ல வேண்டும் என்பதை தங்களால் தீர்மானிக்க முடியாது. எனினும் முக்கிய பகுதிகளில் போக்குவரத்துக்கு தீங்கு விளைவிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.

கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு நகரை சுற்றி பார்க்க வாகனத்தில் சென்ற போது, குறித்த வாகனத்தை முக்கியஸ்தர் வாகன தொடரணி ஒன்று மோத பார்த்ததாக தகவல்கள் தெரிவித்தன.

இதனையடுத்து முக்கியஸ்தர்களின் வாகன தொடரணியால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை இதன்போது ஜனாதிபதி உணர்ந்துள்ளார்.

இது போன்ற பிரச்சினைகள் தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டும், குறித்த நடவடிக்கைகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சாரதியொருவர் தெரிவித்தார்.

சில அமைச்சர்கள் மற்றும் சேவை பிரதானிகள் மாத்திரமே பல வாகன தொடரணிகளை பயன்படுத்த முடியும். எனினும் தொழிலதிபர்கள் உள்ளடங்கலாக பல தனிநபர்கள் மூன்று அல்லது நான்கு வாகனங்களை வாகன தொடரணிக்காக அமைச்சர்களை போன்று பயன்படுத்துவதாக தெரியவருகின்றது. (சுபுன் டயஸ்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .