2021 மே 06, வியாழக்கிழமை

இலங்கை - வியட்நாம் நாடாளுமன்ற சங்க தலைவராக திஸ்ஸ விதாரண

Super User   / 2011 செப்டெம்பர் 22 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை  - வியட்நாம் நாடாளுமன்ற சங்கத்தின் அங்குரார்ப்பண கூட்டம் நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெற்ற போது சங்கத்தின் தலைவராக சிரேஷ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சங்கத்தின் உப தலைவர்களாக சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, மீன்பிடித்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இச்சங்கத்தின் செயலாளராக பிரதியமைச்சர் சாலிந்த திஸாநாயக்கவும் பொருளாலராக அமைச்சர் தயாசிறித திசேரவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இலங்கை  - வியட்நாம் நாடாளுமன்ற சங்கத்தின் 15 பேih கொண்ட குழுவும் தெரிவு செய்யப்பட்டது.

இதன் ஊடாக இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கிடையிலான மத, கலாசார மற்றும் வர்த்த உறவுகளை மேம்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையிலான உறவினை மேம்படுத்துது முக்கிய நிகழ்வாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .