2021 மே 06, வியாழக்கிழமை

மன்னார் கடற்படுகையில் எரிவாயு கண்டுபிடிப்பு; கெய்ர்ன் நிறுவனம் அறிவிப்பு

Super User   / 2011 ஒக்டோபர் 02 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மன்னார் கடற்படுகையில் எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் பெற்றோலிய அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கெய்ர்ன் இந்தியா எனும் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

 

ஆகஸ்ட் மாத முற்பகுதியில் கிணறொன்றை தாம் அகழ்ந்ததாகவும் கடந்தவாரம் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மன்னார் கடற்படுகையில் எஸ்.எல்.2007-01-001 என குறிப்பிடப்பட்ட பகுதியில் பெற்றோலிய அகழ்வாராய்ச்சியில் ஈடுபடுவத்றகான உரிமை கெய்ர்ன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. அந்நிறுவனத்தின் ஒரு அங்கமான கெய்ர்ன் லங்கா (பிரைவேட்) லிமிடெட் எனும் நிறுவனம் மன்னார் பகுதியில் மேற்படி ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

'சிக்யு' எனும் அகழ்வுக் கப்பலை பயன்படுத்தி அப்பகுதியில் 3 கிணறுகளை கெய்ர்ன் நிறுவனம் தோண்டவுள்ளது. இதற்கான செலவு 110 மில்லியன் டொலர்களாகும்.


  Comments - 0

 • ibnu aboo Tuesday, 04 October 2011 01:18 AM

  எரிபொருள் எண்ணெயும், எரிவாயுவும் கிடைப்பது இந்நாட்டின் மாபெரும் அதிஸ்டம். தேசத்தை நேசிப்பவர்களுக்கு இது விட சந்தோசமும், பெருமையும் கிடையாது. இதெல்லாம் விட்டுவிட்டு ஏன் இந்த வெட்டிப்பேச்சு.

  Reply : 0       0

  nakkiran Tuesday, 04 October 2011 01:58 AM

  எல்லா அரபு நாடுகளில் என்னை , காஸ் , கிடைக்குது.
  ஏன் இந்த போராட்டங்கள் ? Iraqu libya என்ன நடந்தது?

  Reply : 0       0

  neethan Monday, 03 October 2011 12:30 AM

  இனி மன்னார் பிரதேசம், பேரினவாதிகளின் குடியேற்றத்தின் மையப்பகுதிதான். மறுபுறம் கச்சதீவின் உரிமை கோரல் மன்னார் வரை இந்தியர்களால் விரிவு படுமோ?

  Reply : 0       0

  meenavan Monday, 03 October 2011 12:49 AM

  110 மில்லியன் டொலர் செலவு செய்து பாவனைக்கு வரும் எரி வாயுவின் விலையானது,சந்தைக்கு வரும் போது, பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற நிலைக்கு செல்லாமல் இருக்க பிரார்த்திப்போம்.

  Reply : 0       0

  thivaan Monday, 03 October 2011 01:44 AM

  முதலில் வட கிழக்கு மக்களின் உரிமையை வழங்கியபின் புதையல் தோண்டுங்கள். இல்லையேல் இடையில் எல்லாம் பஞ்சர் ஆகும்.

  Reply : 0       0

  frf, sri lanka Monday, 03 October 2011 02:05 AM

  மத்திய கிழக்கு நாடுகளைப்போல் இலங்கையும் ஒரு செல்வந்த நாடாகும். இனி இலங்கையர்கள் வெளிநாடு செல்ல தேவை இல்லை.

  Reply : 0       0

  Brooms Monday, 03 October 2011 04:47 AM

  இனி வடகிழக்கு மக்களின் நிலைமை சட்டியிள் இருந்து அடுப்பில் விழுந்த கதைபோல்தான்.

  Reply : 0       0

  Alga Monday, 03 October 2011 03:21 PM

  ஊழல்கள் எல்லாம் ஒழிக்கப்பட்ட பின்னர், கிணறு அமைப்பது சிறந்ததாக அமையும், இல்லவிடில் "நான் தான் சண்டியன் யார்றா கணக்கு கேக்கிற?" என்ற நிலமைதான், சில ஆபிரிக்க நாடுகள் எண்ணெய் வளம் இருந்தும் வறிய நாடாக இருப்பது ஏன்? 1.ஊழல் 2.உள்நாட்டு பிரச்சினை.

  Reply : 0       0

  asker Monday, 03 October 2011 03:39 PM

  brroms,thivaan, ;நீங்கள் எப்ப திருந்த போகிறீர்கள்? எதையும் நல்லதாகவே நினையுங்கள்.

  Reply : 0       0

  uooran Monday, 03 October 2011 04:39 PM

  நமக்கு கொண்ட்டாட்டம் தான்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .