Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 03 , பி.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யொஹான் பெரேரா)
ஹம்பாந்தோட்டையில் எதிர்வரும் 8 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள தெற்காசிய கடற்கரை கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியைஉள்ளூராட்சி தேர்தல் வாக்களிப்பின் பின்னர் ஆரம்பிக்குமாறு ஏற்பாட்டாளர்களைக் கோர வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியைவை தேர்தல் கண்காணிப்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எதிர்வரும் சனிக்கிழமை 23 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி இது தொடர்பாக கூறுகையில், இவ்விடமய் குறித்து தாம் ஏற்கெனவே மஹிந்த தேசப்பிரியவுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் விழாவின் ஆரம்ப நேரத்தை மாலை 6 மணியாக மாற்றுமாறு ஏற்பாட்டாளர்களை கோரியுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் கூறினார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் இவ்விழா தேர்தல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தப்படலாம் என அஞ்சப்படுவதாலேயே இவ்விடயத்தை தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு பவ்ரல் கொண்டு சென்றதாக ரோஹண ஹெட்டியாரச்சி கூறினார்.
எனினும் இது ஒரு சர்வதேச விழா என்பதால் இவ்விழாவை ஒத்திவைப்பது பிரச்சினையாகலாம் எனவும் அவர் கூறினார். இவ்விடயம் குறித்து பொலிஸ் மா அதிபருடன் தான் பேசவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
37 minute ago
43 minute ago