2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

'இலங்கையில் நல்லிணக்கத்துக்கு ஆஸ்திரியா உதவும்'

Super User   / 2011 ஒக்டோபர் 04 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் சமாதானத்தை வலுப்படுத்துவதற்கும் தேவையான உதவியை வழங்குவதாக ஆஸ்திரிய ஜனாதிபதி கலாநிதி ஹெய்ன்ஸ் பிஸ்சர் புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர் ஏ.எல்.அஸீஸ் ஊடாக தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

ஆஸ்திரியாவுக்கான இலங்கை தூதுவராக புதிதாக நியமிக்கப்பட்ட ஏ.எல்.அஸீஸ், தனது நியமன கடித்தினை ஆஸ்திரிய ஜனாதிபதி கலாநிதி ஹெய்ன்ஸ் பிஸ்சரிடம் கையளித்த பின்னர் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இலங்கையில் மேற்கொள்ளப்படும் பொருளாதார அபிவிருத்தி சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில ஆஸ்திரிய ஜனாதிபதிக்கு தூதுவர் அஸீஸ் விளக்கியுள்ளார்.

தூதுவர் அஸீஸ், ஆஸ்திரியாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மற்றும் ஏனைய சர்வதேச நிறுவனங்களின் வதிவிட பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X