2025 ஜூலை 16, புதன்கிழமை

வைத்தியர் மீதான தாக்குதலைக் கண்டித்து அடையாள வேலைநிறுத்தம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வைத்தியர் என்.ஜே.நோனிஸ் மீதான தாக்குதல்ச் சம்பவத்தைக் கண்டித்து இலங்கை மருத்துவ கவுன்ஸில் அடையாள வேலைநிறுத்தமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்கள் இந்த அடையாள வேலைநிறுத்தத்திற்கு  ஆதரவு வழங்கியுள்ளனர்.

இந்த தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படும்  சந்தேக நபரொருவர்  கைதுசெய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மருத்துவ கவுன்ஸின் பதிவாளர் வைத்தியர் என்.ஜே.நோனிஸ் மொரட்டுவையிலுள்ள அவரின் வீட்டிற்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்குள்ளானமை  குறிப்பிடத்தக்கது. DM)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .