2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

மஹாயான பௌத்த ஆலயத்திற்கு ஒரு கோடி ரூபா கொடுத்த பக்தர்கள்

Super User   / 2011 ஒக்டோபர் 06 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(லக்மால் சூரியகொட)

கொள்ளுபிட்டி லிபர்ட்டி பிளாஸாவில் ஜப்பானிய பௌத்த பிக்கு ஒருவராலும் இரு சாதாரண நபர்களாலும் நடத்தப்படும்  'மஹாயான பௌத்த' ஆலயத்தில் உண்மையான பௌத்தம் குறித்து கற்றுக்கொள்வதற்காக  25 பக்தர்கள் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை அந்த ஆலயத்திற்கு வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பௌத்தத்தை மதிப்பிறக்கும் முயற்சிகளை தவிர்ப்பதற்காக இந்த ஆலயத்தின் பதிவை இரத்துச் செய்யுமாறு  பௌத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சு கடிதமொன்றில் கோரியிருப்பதாக கொள்ளுபிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.டி.ஐ. குலசேகர நீதிமன்றில்  தெரிவித்தார்.

குறித்த 'ஆலயத்திற்கு' எதிராக நடவடிக்கை மேற்கொள்வது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை தாம் நாடாளவுள்ளதாக பொலிஸார் கூறினர்.

ஜப்பான், சீனா, கொரியா, தாய்லாந்து முதலான நாடுகளில் மஹாயான பௌத்தம் பின்பற்றப்படுகிறது. இலங்கை, பர்மா, தாய்லாந்து போன்ற நாடுகளில் தேரவாத பௌத்தம் பின்பற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


 


  Comments - 0

 • neethan Friday, 07 October 2011 10:35 AM

  மகாயான பௌத்த கொள்கையை பின்பற்றும் நாடுகள் அபிவிருத்தி உச்ச நிலையில் இருக்கும்போது ,தேரவாத கொள்கையை பின்பற்றும் நாடுகளில் அடக்குமுறையும், இனவாதமும், உச்சமாக அபிவிருத்தி மந்தமாக உள்ளதை காணலாம். நாட்டின் நன்மை கருதி இவ்விரு பிரிவினரும் புரிந்துணர்வுடன் செயற்படுவார்களா?

  Reply : 0       0

  xlntgson Saturday, 08 October 2011 08:32 PM

  தேரவாத நாடுகள் எவை? இலங்கை தவிர வேறு ஒரு நாடும் நினைவுக்கு வரவில்லை உலகில் மகாயான பௌத்த நாடுகளே அதிகம்! கன்பூசியனிசம், டாவோஇசம், zenசென் பௌத்தம் என்று எல்லாம் மகாயானத்தை ஒத்தவை தாம் அல்லது கலப்பானவை தேரவாத பௌத்தம் ஹீனயானவும் அல்லவாம். சிலை வணக்கம் மகாயானத்தில் இல்லை என்றாலும் இப்போது அவர்களும் அதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை என்று தெரிகிறது. துறவிகள் திருமணம் செய்வது மகாயான பிரிவில் அனுமதி- நாளந்தா பல்கலைகழகம் எரிக்கப்படக் காரணமே மகாயான ஹீனயான போட்டி என்று தான் சரித்திரம் சொல்கிறது.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .