Super User / 2011 ஒக்டோபர் 18 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
கடந்த சில வருடங்களில் இலங்கைக்கும் கியூபாவிற்கும் இடையிலான உறவு நெருக்கமடைந்துள்ளது என இலங்கைக்கான கியூப தூதுவர் நிர்ஸியா குவேரா இன்று தெரிவித்தார்.
இந்த உறவின் மூலம் இரு நாடுகளுக்குமிடையில் பாரிய அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள கியூப தூதுவராலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, அமெரிக்காவினால் கியூபாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதார, வர்த்தக மற்றும் நிதி தடைகளை நீக்குவதற்கான பிரேரணை ஒன்றினை எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாயக்கிழமை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொது சபையின் பொது கூட்டத்தில் கியூபா சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் கூறினார்.
கடந்த வருடம் இதே பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட போது 187 நாடுகள் ஆதரவாக வாக்களித்தும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் எதிராக வாக்களித்தன. இதனால் இந்த பிரேரணை நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த தடையின் மூலம் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற நிதி நிறுவனங்கள் கியூவிற்கு உதவ முன்வராமல் உள்ளன. அத்துடன் அமெரிக்காவிலுள்ள வங்கிகள் கியூபாவுடன் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என கியூப தூதுவர் குறிப்பிட்டார்.
இதற்கு மேலதிகமாக அமெரிக்க பிரஜைகள் கியூபா செல்வதற்கும் அந்நாட்டு அரசாங்கம் இன்று வரை தடை விதித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
6 minute ago
34 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
34 minute ago
56 minute ago
1 hours ago